​(கண்ணன், உனக்காய் காத்திருக்கேன்…..)

“அம்மான், ஆழிப்பிரான்” என,

அச்சத்தால் அகலாதே;

அடியவர்க்கன்பன் யான்;

அது அறிவாய், விலகாதே!
எளியன் யான், இடையன் யான்;

எல்லோர்க்கும் இனியன் யான்;

அளித்திடவே, எனதன்பையெல்லாம்

அடைகாத்தே வந்துள்ளேன்;
கொள்வாரோ யாருமில்லை;

கொடுப்பதெவர்க்கு புரியவில்லை;

அள்ளித் தந்திட விழைந்தாலுமே,

அதற்கொரு பாத்திரம் அமையவில்லை!
உய்யும் வழி உனக்கிருக்க−

ஒதுங்கிச் செல்லும் அவலமென்ன?

உனக்காக நானிருக்கேன்;

உணராது நீ போவதென்ன?
என் வாசல் திறந்திருக்க,

ஏனோ இந்த தாமதமே?

உன் கலியும் தீர்த்திடவே, 

விழுவாய் எந்தன் இரு பதமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s