​(மறைத்தாலும், மனம் அறிவானே….)

மயில் அகவி, அகவி, மயக்கத்தோடு,

மாதவா என அழைக்குது;

குயில் கூவி, கூவி, ஏக்கத்தோடு,

கோவிந்தா என பாடுது;
இலை சல சலத்து, சத்தமிட்டு,

இதயம் திறந்து காட்டுது;

நிலை கொள்ளாமல், நெஞ்சம் ஒன்று,

நந்தன் மகனை தேடுது!
நிழல் மேகமெல்லாம் நீந்தி வந்து,

நாதன் நிறம் காட்டுது;

குழல், காற்றின் ஊடே, சேதி ஒன்று,

கோதைக்கிங்கு சொல்லுது;
தேனு, தனை மறந்து, பால் சுரந்து,

தலைவனுக்கே ஆக்குது;

ஏனோ, இதயமொன்று, இயல்வை மீறி, 

இடையனுக்கே துடிக்குது!
மலர் வாசம் தந்து, ஆசை மனதை,

மாயனுக்குச் சொல்லுது;

மாலை, மயங்கிச் சிவந்து, மறைத்த நாணம்,

மெல்ல, மெல்ல காட்டுது;
கருத்த இந்த யமுனை நீரும்,

காதல் கதைகள் பேசுது;

ஒருத்தி உருக, உள்ளம் இங்கு, 

உன்மத்தமே ஆகுது!
விரைந்து வந்த கழலின் ஓசை,

வீம்புக்காக நிற்குது;

கரைந்து போன கன்னி மனசு,

காத்திருக்க எண்ணுது;
திரையாக துகிலும் மூடி,

தன்னை, நிமிர்த்த பார்க்குது;

சிறையினுள்ளே உதித்த ஒன்று, 

சிரித்து எல்லாம் பார்க்குது!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s