​(66)  நாச்சியார் மறுமொழி..

கண்ணன் எங்கே, காணேனே நான்−

கண்டால் உடன், வரச் சொல்வாயோ?

பெண் நான், அவன் சொத்தாவேனே−

பிரிந்தேகினால், பித்தாவேனே!
அவன் கைகளும், எனைத் தீண்டுமோ?

அன்பை அவன், விழி பேசுமோ?

அவன் தோளிலே, நான் சேரவே−

அவனாகவே, வகை செய்வனோ?
அணையாத தாபத்தை, அவன் அறிவானோ?

அதரத்தின் நிறம் பார்த்து, நிலை உணர்வானோ?

துணையாக வர வேண்டி, துடிக்கின்ற என்−

தணலாகும் பெண்மையிலே,

மெழுகாவானோ?
எதிராக நின்றாலே, அது போதுமே;

சதிராடும் என் நெஞ்சம், சிறிதோயுமே;

விதி உண்டு, அவன் இங்கு எனைச் சேரவே−

கதி  ஒன்று, அவனுக்கினி என் மடியாகுமே!
விண் மீது வெண்ணிலவு, வரும் முன்னமே,

என் முன்னே, அவன் வந்தால், நலமாகுமே!

பொன்னான காலங்கள் கழிந்தோடினால்−

பெண் பாவம், அவனுக்கொரு பழியாகுமே!
கண்ணாரக் காண, அவன் வர வேண்டுமே;

வாயாரப் பேச, அவன் துணை வேண்டுமே;

நெஞ்சார சுகம் காண, அவன் தோள் வேண்டுமே;

நான் ஆற, எனக்கென்றும், அவன் வேண்டுமே!
தணியாத பெண்மை, இங்கு தவித்தேங்குதே;

கனியாத காதலினால், அது தடுமாறுதே;

இனியேனும், அவன் வந்தால், நிலை மாறுமே!

இனிதாக, என் காதல் அரங்கேறுமே!
தூதாக நீ சென்று, அழைத்தோடி வா; அது−

மாதெந்தன் மன நோய்க்கு, மருந்தாகுமே;

காதங்கள் கடந்திங்கு, அவன் வந்தாலே−

காத்திருக்கும் என் காதல், அவன் விருந்தாகுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s