(67)  நாச்சியார் மறுமொழி…

கண்ணன் வரும் நேரமிது..

காற்றில் வந்த சேதி அது;

காத்திருக்கும் என் மனது−

கண்டுவிட, கதை எழுதும்!
ஏங்கும் எந்தன் இள வயது−

எதிர் வந்தால், தலை குனியும்;

நீங்க அவன் யத்தனித்தால்,

நிலை குலைந்து, நிறம் வெளுக்கும்!
முகம் அவன் ஏந்த வந்தால்,

முழு வதனம் சிவந்து விடும்;

முத்தம் தர நெருங்கி வந்தால்,

மோகம் கொண்டு மயங்கி விடும்!
கரங்களால் பிணைத்து நின்றால்,

கன்னி என பெருமை கொளும்;

காதலிலே பிதற்றி நின்றால்,

காணும் இன்பம் கோடி பெறும்!
என்னவளே என அழைத்தால்,

இறுமாப்பில் நிலைத்து விடும்;

ஏதும் சொல்லாதகன்றுவிட்டால்,

தூதனுப்பத் துவங்கி விடும்!
அருகினில் வரும் போதில்,

அவத்தமாய் நடந்து கொளும்;

அங்கிருந்து ஏகி விட்டால்,

அவனுக்காய், ஏக்கம் கொளும்!
மறக்கவும் முடியாமல்,

உறக்கமும் தொலைத்து விடும்;

மறுக்கவும் தெரியாமல்,

மனதையும் அளித்து விடும்!
அகத்தை அறிந்தவனாய்,

அவன் வர, தன்னைத் தரும்;

அகத்துள் ஒளித்தவனை−

அமர்த்தியே, நிறைவு பெறும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s