​(68)  நாச்சியார் மறுமொழி…

மயில் பீலி அசைந்தாட,

மன்னன் அங்கு வந்தானே;

குயில் இசையை பிடித்து அவன்−

குழலிலே தந்தானே!
மலர் மாலை மார்பணிந்து,

மங்கை என்னைக் கவர்ந்தானே!

உலர்ந்த எந்தன் அதரங்களின்,

ஒரே காரணம், அவன் தானே!
முகிழ் சிரிப்பைத் தான் உதிர்த்து,

மொத்தமாய், எனைத் தின்றானே!

மகிழ்வோடு, மங்கை எந்தன்−

மனதில் வந்து நின்றானே!
தணியாத தாபம் என்னில்−

துளித்துளியாய் விதைத்தானே!

இனியெல்லாம் அவனென்று−

என்னை,  அவனில் புதைத்தானே!
கணை ஒன்றை கண்களினால்,

கன்னி மீது எய்தானே!

எனை மறந்து, தனை இழக்க−

எத்தனையோ செய்தானே!
உளம் உருகி, அவன் மீதில், 

உன்மத்தம் நான் ஆனேனே;

களம், அவனின் காதல் மனதென,

கரைந்து அதில், நான் போனேனே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s