​(69) நாச்சியார் மறுமொழி….

கரமும் தீண்டும் நேரம்−முகம்

நிறமும் மாறிப் போகும்;

சிரமும் தாழ்ந்து நோக்கும்−உனை

வரமும், வேண்டி கேட்கும்!
மயக்கம் கொள்ளும் மனது; ஒரு−

பிணக்கம் பேணும் பெண்மை;

இணங்க விழையும் உள்ளம்; ஏனோ,

தயக்கம் தானே, வெல்லும்!
உன் மூச்சுக் காற்று உரச, 

என் மேனி விதிர்த்து அடங்கும்;

என் மூச்சின் தாப வீச்சில்

உன் இதயம் என்னை அறியும்!
நாணத் திரையும் விலக்கி−

நீயும், என்னைப் பெற வா!

காண விழையும் கண்கள்−

காண, வாய்ப்பும் தர வா!
என்னை மீட்டு எடுத்து,

உனக்குள் ஒளித்து, வைப்பாய்;

தன்னைத் தந்த என்னை,

தழுவி சுகமும், அளிப்பாய்!
மாயன்  வாரி அணக்க−

மறைய வேணும் தனிமை;

மங்கை எந்தன் வாழ்வில் 

மற்றும், வேறு ஏது இனிமை?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s