​(70) நாச்சியார் மறுமொழி….

வருவாயா, வருவாயா,

வஞ்சியும் வாடினேன்−வருவாயா?

தருவாயா, தருவாயா, 

தயையால் தரிசனம்−தருவாயா?
ஒரு முறையேனும் கண் முன்னே−

உத்தமன் உனை நான் கண்டாலே−

உருகிடும் நெஞ்சம் தெளிவுறுமே;

உன்மத்தமே கொஞ்சம் குறைந்திடுமே!
காதலில் இதயம் தவிக்கிறதே;

காவலை மீறவும், அது துடிக்கிறதே;

கண்ணா, உனையே நினைக்கிறதே; இந்த−

கண் இமை மூடவும் மறுக்கிறதே!
மாயமும் நீ ஒன்று செய்தாயோ?

மயங்கவே, என்னையும் வைத்தாயோ?

மற்றவை எல்லாம் இந்த மனத்தகற்றி−

மங்கையை பித்தாக்கி, நீ மறைந்தாயோ?
அழைக்கும் என் குரல் கேட்டிடுமோ?

அச்சுதன் குழலிசை மீட்டிடுமோ?

பிழைக்கவே செய்வாய் பெண் எனையே

பிறந்ததே நானும், உனக்கெனவே!
வா, வா, வா, வா, வைகுந்தா−

வரமென் வாழ்வில் நீ தானே!

பார், பார், பாரெனை பரந்தாமா−உன்னில்

பாதியும் இங்கே நான் தானே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s