​(72) நாச்சியார் மறுமொழி..

அருகே, அருகே, தெரிந்தாலும்,

கடல் நீரினை, வானம் தொடுவதில்லை;

உருகி, உருகி, நான் தவித்தாலும்,−உன்

உள்ளத்தில், எனக்கோர் இடமுமில்லை!
நீலவானில் தவழ்ந்தாலும்,

நிலவிற்கு வானம் சொந்தமில்லை;

உன் நினைவில் நாளும் தவித்தாலும், என்−

நினைவிற்கு உனக்கோ நேரமல்லை!
நிலவினாலே அலர்ந்தாலும்,

அல்லியை, வெண்மதி அறிந்ததில்லை;

உனக்காகவே உயிர் வாழ்ந்தாலும், என்−

நெஞ்சமோ, உனக்கு விளங்கவில்லை!
தென்றலுடைய தாபமெல்லாம்,

அந்த அல்லிமலருக்குப் புரிவதில்லை;

எந்தன் மனதின் ஏக்கமெல்லாம் −உன்

உள்ளமும் ஏனோ உணர்வதில்லை!
ஒருதலைக் காதல் இயற்கையிலும்,

உள்ளதை, நான் ஏன் நினைக்கவில்லை?

ஒவ்வொரு நாளும் உன் நினைவில், நான்−

துடிப்பதை, ஏன் இன்னும் நிறுத்தவில்லை?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s