​(73) நாச்சியார் மறுமொழி…

ஒளி சூழ்ந்து நின்றாலும், 

இருட்டினில் நான் நடக்கின்றேன்;

ஒதுங்க இடம் இருந்தாலும்,

மழையினில் நான் நனைகின்றேன்;
நிழல் துணையாய் வந்தாலும்,

வெயிலில் நான் வாடுகின்றேன்;

நீ அருகே இருந்தாலும், 

தனிமையில் நான் தவிக்கின்றேன்!
முகம் மெல்லச் சிரித்தாலும்,

அகம் கொதித்து இருக்கின்றேன்;

மூன்றாம் பிறைச் சந்திரனாய்,

என் மனதை மறைக்கின்றேன்;
பகல் நேர சூரியனாய், புன்னகையோ புரிகின்றேன்;−ஆனால்,

பகல் வாழ்வில் வருவதையே, 

எதிர் நோக்கி இருக்கின்றேன்!
வெண்ணிலவின் தண்மையை, 

நான் கண்களிலே காட்டுகின்றேன்;

வெந்திருக்கும் உள்ளத்தை,

ஒரு திரையிட்டு மூடுகின்றேன்;
இன்பமென்னும் ஓர் உலகில்,

இருப்பதாகக் கூறுகின்றேன்;−ஆனால், 

இன்பம் எங்கு எங்கு என்று, 

இன்னமும் நான் தேடுகின்றேன்;
மேகம் போல் என் அன்பை,

மாரியாகப் பொழிகின்றேன்;−அதே,

மேகத்தின் அடியில் நான்,

தாகத்தோடு நிற்கின்றேன்;−மன
மோகத்தின் வேகத்தை, உன் மீது காட்டுகின்றேன்;−அதே

மோகத்தின் பிடியில் நான்,

சோகத்தால் துடிக்கின்றேன்!
நிழலுக்கு உயிர் கொடுத்து, நிஜமாக எண்ணுகின்றேன்; −என்

நிலை மாறும் நாளை,

நான் எதிர்பார்த்து இருக்கின்றேன்;
நிலையில்லா உறவிதுவோ என, 

சில கணமும் நினைக்கின்றேன்; அந்−

நிலை நீங்க, நீயும், நானும்,

“நாமாக” விழைகின்றேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s