​(75)  நாச்சியார் மறுமொழி…

பறந்து விட்ட உன்னை நான்−இன்னும்

பல நாள் நினைப்பேனோ?

மறந்து விட்ட உன்னை நான்−என்

மனதில் வைத்துத் தவிப்பேனோ?
திறந்து இருக்கும் என் உள்ளம்−தானே

தாளும் போடாதோ?

துறந்து ஓடிய உன்னை மனம்−தானும்

தவிர்த்து வாழாதோ?
நிறைந்து நிற்கும் நினைவுகளை−என்

நெஞ்சம் நீக்க முயலாதோ?

உறைந்து போன உணர்வுகளை−என்

உள்ளம் மீட்டுத் தாராதோ?
கலங்கித் துடிக்கும் என்னுடைய

கண்ணின் ஈரம் மாறாதோ?

மயங்கி நாளும் தவிக்கும்−இந்த

மனதின் துயரும் மறையாதோ?
உன்னை மறந்து வாழ்ந்திடவே−என்

உள்ளம் கற்றுக் கொள்ளாதோ?

என்னை எரிக்கும் வேதனையை−என்

இதயம் அணைத்து மீளாதோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s