​(76) நாச்சியார் மறுமொழி…

(இன்று ராதை வலியும், வருத்தமும் அதிகரித்து, சினத்துடன் காணப்படுகிறாள்..)
நெஞ்சைத் தொட்டு நீயே சொல், 

நியாயம் தானா செய்ததென்று;

நஞ்சை விடவும் கொடியவனே! நீ−

நாணித் தலை ஏன் குனிகின்றாய்?
தனிவழிப் பயணம் செய்தவளை−

தேடிப் பிடித்து, வலை விரித்தாய்;

இனிய மொழிகள் பல பேசி−என்

இதயம் உன்னிடம் மயங்க வைத்தாய்!
வானும், மதியும் நாமென்று,

வார்த்தை பேசி மகிழ்வித்தாய்;

நானும், நீயும் ஒன்றென்று−ஒரு

நாடகம் ஆடி நம்ப வைத்தாய்!
நேற்று வரை நான் நினைத்திருந்தேன்−

உன் உள்ளம் எனக்கே சொந்தமென்று;

இன்று தானே புரிகின்றது−நீ

ஏமாற்றி விட்டாய் என்னையென்று!
நடிப்பின் திறனைக் காண்பிக்க−

நானா உனக்கு, அகப்பட்டேன்?

வெடித்து உள்ளம் துடிப்பதெல்லாம்−ஒரு

விளையாட்டாகவும் போய் விடுமா?
வலியால் என்னை வருந்த விட்டு−

வேடிக்கைப் பார்க்கவா, நீ வந்தாய்?

நலிந்து நானும் நொறுங்கிடவோ−நீ

நெருங்கி வந்து, பறந்து விட்டாய்?
அன்பின் ஆழம் அறியாமல்−

அழ வைத்து நீ சென்று விட்டாய்;

கண்ணில் நீரை வரவழைத்து−நம்

காதலையே, கறை படுத்தி விட்டாய்!
விலகிவிட்டாய் என் வாழ்வினின்று−

வேதனையில் மனம் மிதக்க விட்டு;

உலகில் இறக்கட்டும் காதல் இன்று−ஒரு

உண்மை உறவும் மாறுமென்றால்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s