(உன்னுள்ளே, ஒரு இடம்..)
சுட்டும் விழிச் சுடர் இரண்டும்−எனை

சுண்டி இழுக்குதடா;

பட்டுப் பொன் மேனியோ−எனை

பரவசப் படுத்துதடா!
மொட்டு உதட்டழகு−எனை

மயங்கச் செய்யுதடா;

கட்டுக் கருக்குழலில் பீலி−எனை

கண்டு சிரிக்குதடா!
இட்டு நிரப்பிய வெண்ணை,

எனக்கும் வேணுமேடா;

விட்டு விட்டு என்னை, நீ உண்டால், 

உன் வயிறு வலிக்குமேடா!
தொட்டு உரசும் துகிலோ, எனை−

துச்சமாய் பார்க்குதடா!

கிட்டுமோ இப்பேறும் என்றெனை

கேலியாய் கேட்குதடா!
எட்டெழுத்துள் ஒளிந்த உனக்கோ, 

என்னைத் தெரியுமேடா!

சொட்டுக் கண்ணீர் தருவேன்; எனை நீ

சேர்த்து, உன்னில் வையடா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s