(வருவதும் எந்நாளோ?…)

அருகில், நீயில்லா நேரங்களில், 

மருகி நெஞ்சம் மௌனத்தை தழுவுதடி;

உருவம் உனது காணாத வேளை, உளம்−

உருகி, உள்ளுக்குள் தவிக்குதடி;
வருவதும் போவதுமாய் உன் நினைவுகள்,

−எனை

வாட்டி வதைக்குதடி;

மறு முறை காண்பது என்றோ, என 

மனமும்,  மறியல் செய்யுதடி!
கருத்த உன் கூந்தலின் நெளிவு,

கண்ணுக்குள் சுழன்று ஆடுதடி;

சிறுத்த உன் இடையின் எழிலோ, என்

சிந்தையை திருடிச் செல்லுதடி; 
பருவம் உனதை எண்ண, என்

படுக்கையோ, நோக அடிக்குதடி;

இருவர் இணைவதையே, என்−

இதயம் எழுதிப் பார்க்குதடி;
உறுத்து வந்த என் வினையோ,

உன்னை கொண்டெங்கு சென்றதடி?

வருந்தும் என் வாலிபத்தை,

விளக்க நீ, என்றோ வருவாயடி?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s