​(அணுவிலும், உனை அறிவேனே..)

உருவம் மாறி வந்தாலும், 

உன்னை நானோ அறிவேனே;

உருகுகின்ற உள்ளமிதில்,

உவகையின் சுவடாய் உணர்வேனே!
கரங்கள் என்னைத் தீண்டுகையில்,

காதலின் மென்மையை சுகிப்பேனே;

கள்வனாய், எனை நீ திருடுவதை,

கண்களை மூடி நான் களிப்பேனே! 
உதடுகள் வாளாதிருந்தாலும்,

உன் உள்ளம் பேசிட, கேட்டிருப்பேன்;

ஒவ்வொரு நொடியுமே உன்னை நான்,

விழி மூடாதே பார்த்திருப்பேன்! 
நினைவால் நீ என்னை அணைப்பதெல்லாம்,

நெஞ்சம் நன்றாய் உணர்கிறதே;

நீயாய் இயம்பாதிருந்தாலும்,

நங்கை மனம், அது அறிகிறதே!
செம்புலப் பெயல் நீர், அது போலே,

சேர்ந்தேன் உன்னை சிந்தையிலே; இனி,

செந்தாமரையாய் நான் அலர, என்−

சூரியனே, நீ உதித்திடுவாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s