​(உன் தயை வேண்டும், ராதே…)

குழல் வழியும் கீதம், எனை

கிறங்க வைக்குதே;

குழலி மீதொரு மோகமோ, 

எனை மயங்க வைக்குதே;
நிழலாக தொடர்வதற்கு 

நெஞ்சம் துடிக்குதே;

நீயாக அனுமதிக்க−

நேரம் பார்க்குதே!
போக்கெல்லாம் நீ காட்ட,

உளம் பித்தாகுதே;

வாக்கொன்று தந்தாலே,

வாழ்வு முத்தாகுமே;
தாக்காதே, கண் இணையால்,

தவித்திடுவேனே;

தமியேனும், தாபத்தால்

எரிந்திடுவேனே;
ஏற்காது போகாதே,

ஏழையாவேனே;

சேர்க்காது தள்ளி வைத்தால்,

சீர் அழிவேனே!
தோற்காத நான் உனக்கு

தோற்றிடவா, சொல்;

உன்−

தாளிணையில், எனை இழந்து,

வென்றிடவா, சொல்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s