​(தவிக்க விடாதே, தாளேன் நானே…)

ஆநிரை மேய்க்கும் அண்ணலே நீ, என்−

அகமே ஈர்க்கும் அழகன் அன்றோ?

வானின் நிலவாய் உன் வதனம்−எனில்

விளைத்திடும் மாற்றம் புரியுமன்றோ?
பெண்ணின் இதயம் மென்மை அன்றோ?

பெம்மான் அதை நீ அறியாயோ?

பேரெழில் கொண்டெனை பித்தேற்றி−

பேதையாய் செய்வதும் முறை தானோ?
கார்வண்ணம் கண் இணை கண்டாலே,

காதலால், கரைய ஏன் வைத்தாயோ?

காலங்கள் கடந்திடும் உணர்வின்றி,

கன்னியை, களவுமேன் செய்தாயோ?
பார்வைச் சிறையில் பூட்டுகிறாய்; பின்

பாராமுகமே காட்டுகிறாய்!

ஆர விழுங்கியே அடியேனை, 

அனலிடை மெழுகாய் வாட்டுகிறாய்!
அன்றணைத்தாயே, அரவிந்தா!

அதில் அடியேன் எனையே இழந்தேனே!

இன்றெனை, ஏன் நீ மறந்தாயோ?

இவள் இதயமும் இரும்பென

நினைத்தாயோ?
இனியும் சகியேன்,கண்ணாளா: நீ

வருநாளே, என் பொன் நாளாம்;

தனிமைத் தீயிடை எந்நாளும், எனை−

தவிக்க விடாதே, தாளேன், நான்!
உன் இதழில், என் பெயர் தவழட்டுமே;

உன் இரு கரம் என்னைத் தழுவட்டுமே;

என் கரணங்கள் உனக்கென ஆகட்டுமே;

இந்த சீவனும், இனி உன்னில்−

இணையட்டுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s