​(பரிந்திடுவாயே, பாலிப்பாயே…)

அன்பை பொழியும் அம்மா,

உன்னை நாடி வந்தோம்;

துன்பம் இனிமேல் எம்மை,

தீண்டவும் கூடுமோ?
தவறேது செய்தாலும்

தாங்கியே பிடிப்பாய்;

எவர் வெறுத்தாலுமே, 

எம் துணை இருப்பாய்;
உன்னை அன்றி யாரே,

உலகினில் பரிவார்?

உழலும் சேய்களின்,

உறுகலி அறிவார்?
ஏதங்களாலே யாம் 

நிறைந்தோமே;

பாதகம் வருமோ,

பரமனும் ஏவிட?
வீரியம் கொண்டவன்; அவன்−

வினை வழி கொள்பவன்;

காரியம் செய்திட,

கணக்கெல்லாம் பார்ப்பவன்;
வருந்திடும் சேய்களின்

வாதை உணராதவன்;

வாரி அணைத்திடும்

வகை தெரியாதவன்;
வீணர்கள் எமக்கு

வாழ்ச்சி அளியாதவன்;

வேதனை சுழல் இட்டு, எமை,

வேடிக்கை பார்ப்பவன்;
வழு எமதெல்லாம், 

போகமாய் ஏற்கும்,

வள்ளல் மனமே,

தாய் உனதாகும்;
அழும்குரல் கேட்டு,

பதறிடுவாயே;

ஆறுதல், எமக்கிங்கு,

என்றும் நீயே!
கண்களை இமையும் 

காப்பது போலே,

எங்களைக் காத்திட,

நீ வருவாயே!
போகட்டும் பாவம்,

என்றொரு வார்த்தை, 

பக்குவத்தாலே, நீ

சொல்லலாகுமோ?
ஆகட்டும் கண்ணே, 

என்றருள்வானே! உன்

அழகிற்கு அவன், ஓர்−

அடிமை தானே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s