​(பிணைக்க வா….)

வெறும் கயிறும் எனை கட்டிடுமோ?

வீண் முயற்சியும் வேண்டுவதோ?

அருந்தவத்தாரும் அறியவில்லை−

அதுவும், உனக்கேன் புரியவில்லை?
கரும்பே, கனியே என்பதனால்,

கண்ணன் வசமே ஆவேனா?

அரும்பும், ஒரு துளி 

நீர் போதும்;

அன்புக்கு, அடிமை ஆகிடுவேன்!
என்னைக் கட்டிடத் தெரியாமல், 

ஏனோ யாவரும் அலைகின்றார்!

தன்னைக் கொண்டு

கட்டாமல்,

தாம்புக்கயிறும் தேடுகின்றார்!
அன்னை அல்லவா, உனக்கென்கின்றாய்!

அகப்பட்டால், ஆகாதாவென வினவுகிறாய்!

பின்னை, எனக்கெது மார்கம் இங்கே?

பிணைத்துக் கொள்கிறேன்,

உன் கயிறு எங்கே?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s