மண் உண்டு,  வாயுள்ளே,

மூவுலகம் காட்டினான்;

பெண் மானம் காத்து, தான்,

பரமன் எனவே நாட்டினான்;
கண் அசைவில், கதிர் மறைத்து,

களத்தில் இருளை ஊட்டினான்;

விண் உயர தான் வளர்ந்து

விஸ்வரூபம் சாற்றினான்!
அனந்தனையே தான் உகந்து,

ஸயன மேடை ஆக்கினான்;

அவன் வைரியை, தான் ஊர்ந்திடும்

வாகனமாய் நோக்கினான்;
மனத்தினுள்ளே மறைந்திருந்து,

மாயம் செய்தியக்கினான்;

மலரடியில் வீழ்ந்தாரை

மகிழ்ந்து தானும் தூக்கினான்!
அகடிதகடா சாமர்த்தியம்,

அவன் இயல்வு அல்லவோ?

சகல கலா வல்லவனை,

சாமான்யன் அளப்பனோ?
அடியராய் நமை உணர்வோம்;

அவனை நெருங்க, அதுவேயாம் வழி!

அபயமென அடி பணிவோம்;

அதுவாகுமே உய்யும் ஒரே வழி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s