​(87) நாச்சியார் மறுமொழி…

உருகி, உருகி, உள்ளம் தவிக்குதே−

உன் பார்வை வேண்டி, மனம் மறுகுதே;

பெருகிடும் விழிநீர், பாதை மறைக்குதே−

பாவையுன் நெஞ்சமோ, எனையே மறுக்குதே!
கனத்த இதயமாய், காலமும் போகுதே−

மனத்தே உன் நினைவுகள், எனையே வாட்டுதே;

இனம் புரியாமலே, இதயமும் ஏங்குதே−பெரும்

தனமிழந்ததாய், துயரமும் சூழுதே!
அன்று உன்னுடன் நெஞ்சமும் சென்றதே−

இன்று வரையிலும் திரும்பிடக் காணேனே;

என்று உனது மனம், இரங்கிடுமோ, சொல்,

என்று உனது வாசல்  திறந்திடுமோ, சொல்;
ஒரு முறையேனும், என் முகம் நோக்கு−

உருகியே நிற்கும், என் நிலை நோக்கு;

தருகின்ற துன்பமே, போதுமென்றாக்கு−

மருந்தாய், உனைத் தந்து, என் நோய் போக்கு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s