(மங்கள ரூபிணி, மதியணி, சூலினி…மெட்டு..)

(நவராத்திரி நாயகி…)

அச்சுதன் பத்தினி, 

அழகிய பைங்கிளி−

அடியவர் பெரும்நிதியே!
இச்சகம் தழைக்க, 

இரங்கியே வந்த−

ஈகையின் ப்ரதிநிதியே!
உத்தமி உன் பதம்

உவந்தே ஏத்திடும்

ஒவ்வொரு சீவனுக்கும் −
ஏதங்கள் பாராமல்,

ஏழை என்னாமல்,

அபயம் அளிப்பவளே!
ஐயிறு திங்கள் 

சுமந்தவள் தோற்க,

ஓடி வந்தருள்பவளே!
ஓங்கார உறைபொருள்,

ஒப்பிலா மறைபொருள்−

அவனுவந்த, உத்தமியே!
மாதவன் துணையே,

மங்கள உருவே! எம்−

மனை நீ நிறைவாய்!
தாய் எந்தன் தயையால்,

துயர் இனி இல்லை

என்றும் நீ சொல்லிடுவாய்!
சரணென புகுந்தவர், என்

சேய் என்று நீ−

மங்கலம் சேர்த்திடுவாய்!
திருவடி வீழ்ந்தார்−

ஒரு குறை காணார்,

என்பதும் உணர்த்திடுவாய்!
மங்களம், மங்களம்,

மாலவன் பத்தினி,

மங்களம் உனக்காமே!
தங்கிடும் செல்வமும்,

தடையிலா இன்பமும்,

உன்னால், எமக்காமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s