​(உள்ளமிது, உனக்காமே…)

உலகாளும் சூரியனே−

உனக்காகும் தீபம் இதே!

நலம் யாவும் யாம் பெறவே−

நயந்தேற்பாய், ஆரத்தியே!
பூரணனே ஆனாலும்−திரி

புவனம் ஆண்டாலும்,

நாரணனே! தோற்றிடுவாய், இதை−

நான் மகிழ ஏற்றிடுவாய்!
உன் நிலையின் உயர்வினுக்கு,

உலகளவு தந்திடலாம்;

என் நிலையை உணர்ந்து விட்டால்,

எது தரினும், போற்றிடலாம்!
பத்தர் கூட்டம் உனக்குண்டு;

படையல் இட, பலருண்டு;

நித்தமுமே, நால்விதமாய்−

நயந்தளிப்போர் நிறைய உண்டு!
ஏழை நான் தருவதற்கு,

என்னிடமே என்ன உண்டு?

பேழையான என் மனதில்,

பெம்மான் மேல், பித்து உண்டு!
காதல் பெருகும் என் நெஞ்சை,

கனிந்து நீயும் கொண்டு விடு;

கண் இணையால் எனை நோக்கி,

கவலை எல்லாம் விண்டு விடு!
எட்டெழுத்து பெட்டகமே,

என்னை விட்டு விலகாதே;

இட்டம் இவள் இதயமென்று,

இறை நொடியும் அகலாதே!
சரணெனவே உனை அடைந்தேன்;

சடுதியிலே வந்து விடு!

அரணாக உன் அருளை,

அபலைக்கு நீ தந்து விடு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s