​(என் பூவுக்கேற்ற பூ உண்டோ?…)

என் கருப்பையில் உதித்த 

எழில் கற்பகப் பூவே!

உன் சிரம் அணிய உகந்த மலர், 

எது சொல் நீயே!
மல்லிச் சரம் சூட வந்தா,

மதி முகத்திற்கு சேரலையே;

முல்லை மலர் எடுத்து வெச்சா,

முத்துச் சிரிப்பு முன் நெறக்கலையே!
தாழம்பூ சடை பின்னல்,

தங்க முகம் முன் மங்கிடுதே;

தேன் சொட்டும் ரோசாப்பூவும்,

தன் அழகை இழந்திடுதே! 
செண்பகமும், சாமந்தியும்,

சட்டென்று வாடிடுதே;

சொர்கமே, உன் முன்னே

சீவனற்று போயிடுதே!
எந்த பூவை எடுத்தாலும்,

உனக்கு ஈடு ஆகலையே;

என் சின்னப்பூவே, சிரிக்கும் பூவே,

என்ன செய்வது, தெரியலையே!
பொன்னும், மணியும், புதுமலரும், உன்−

புன்னகை பூவிற்கு நிகராகலையே;

என் இளவரசி, எழிலரசி,

உனக்கேற்ற மலரும் இங்கு உருவாகலையே!…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s