​(கனவும், நிஜமாகுமா, காதலா?…)

கனவில் தெரியும் உருவம் உனதை, 

காற்றினிலே, நான் அணைக்கின்றேன்;

மனதில் அந்த சுகமும் உணர்ந்து,

மயிர்கூச்சமே அடைகின்றேன்!
கால நேரம் மறந்து நானும்,

கற்சிலையாக நிற்கின்றேன்;

கரியவன் உன்னை, என் கரங்களினாலே

கட்டிப் பிடித்துக் களிக்கின்றேன்!
தென்றலும் இடையில் புகுந்திடாது,

தணிக்கையெலாம் செய்கின்றேன்;

என் தனமாக உன்னை வரித்து,

என்னுள், உன்னை ஒளிக்கின்றேன்!
பொங்கும் எந்தன் காதல் கொண்டு−

புனிதம் உன்னை செய்கின்றேன்;

சங்கம் சுவைத்த வாயின் அமுதம்−

சிறிதே பெறவே,  நான் நைகின்றேன்!
உன் மேனியின் வாசம், நாசியில் படர,

உயிர்ப்பின் சக்தியை அறிகின்றேன்;

பெண்மையை விருந்தாய் பரிந்தே அளித்து,

உன்னில் நானும் கரைகின்றேன்!
ஈருடலாக ஆனதாலே,

இன்பச் சுவையில் திளைக்கின்றேன்;

ஓருயிராக ஒன்றிப் போக,

உன்னை என்னுள் உணர்கின்றேன்!

 

ஆராத அமுதன், உன் அணைப்பிற்காக,

அணுவிலும், ஆர்த்தியால் வாடுகிறேன்;

தீராக் காதல் என்னை ஆள, உன்

தழுவலை மருந்தாய், நாடுகிறேன்!
கனவுகள் எனது, கலையாதிருக்க,

கன்னி உனையே யாசிக்கிறேன்;

நினைவிலும், நிசத்திலும், நீ எனை சேர்ந்திட,

நெடியோன் நிழலையே, பூசிக்கிறேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s