​(நவராத்திரி நாயகியே….)

உனை அன்றி வாழ்வு இல்லை;

உன்னை கும்பிட்டவர்க்கென்றும் 

தாழ்வு இல்லை, தேவி..

உனை அன்றி வாழ்வு இல்லை!
தாயாய் வந்தெமை தாங்கிடுவாயே;

சேயாய் எமையும் சேர்த்தணைப்பாயே!

நாயோங்கள் நலம் என்றும் நின் தயையாலே;

நீயே அறிவாயே, சிவன் இடத்தாளே!
தீரா வினை யாவும் தீர்த்திடுவாயே;

திரிசூலம் ஏந்தி நீ, துணை வருவாயே;

ஆறும் தலைவி, நீயே என்று,

அடியவர்க்கருளையே அளித்திடுவாயே!
அஞ்சேல் என்றோர் வார்த்தை சொல்லி,

ஆதுரம் பெருகவே, ஆட்கொள்வாயே;

தஞ்சம் உனதிரு தாளென வந்தோம்;

தாயே, தமியர்க்கு வாழ்வளிப்பாயே!
நாமம் சொல்லி, நின்னை யாமடைந்தோம்;

சேமம் வேண்டியே, சேவித்து நின்றோம்;

ஆம், ஆம் எனது சேயோங்கள் என்று,

அபிராமி, சிவகாமி, ஆதரிப்பாயே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s