​(பயணங்கள் முடிந்திடுமோ?…)

கருவறையில் விழுந்த போதே,

பெரும் பயணம் என உணர்ந்தேன்;

மறுக்க இயலாதென

உணர்ந்து,

மறுபடியும், இங்கு வந்தேன்!
தாய் மடியின் இடையினிலே,

தாலாட்டி, ஒரு பயணம்;

தள்ளாடி நடை பழக,

தொடங்கியதே நெடும் பயணம்!
பாலகனாய், பள்ளி நோக்கி,

பாங்காக ஒரு பயணம்;

காலமதும்,  செல்லச் செல்ல,

காளையாகி, ஒரு பயணம்!
கன்னியவள் கைபிடித்து,

கல்யாண களி பயணம்;

கூடி இன்பம் கண்ட பின்னே,

குடும்பம் நிமிர்த்த ஒரு பயணம்;
ஓடி, ஓடி களைக்க வைத்த

ஒயாத ஒரு பயணம்;

ஓடி முடித்த பின்னேயும்,

வாட்டம் நீங்கா வலி பயணம்!
திரும்பி பார்க்க நேரமில்லா,

திசை மாறிய, பல பயணம்;

வருந்தி இனியும் பலனேது?

வகுத்த பாதை எனதேது?
பயணத்தின் பொழுதுகளில்,

பலரும், என் உடன் வந்தார்;

பாதி வழி முடியும் முன்னே−

பிரிந்து, ஏனோ, சென்று விட்டார்!
பெற்றவரும் இறந்து விட்டார்;

மற்றவரும் துறந்து விட்டார்;

உள்ளதிப்போ, இவள் ஒருத்தி−

அவளும், உதிரும் போது, எனை மறப்பாள்!
கருவறையின் தனிமை

அன்று,

கற்றுத் தந்த ஒரு பாடம்−

கடைசி வரை, வந்திடுமோ? எனை−

கல்லறை வரை இயக்கிடுமோ?
காலதேவன் கண் திறந்தால்,

காணுவேனோ, ஒரு ஓய்வு?

இல்லை,

கல்லறை பின், ஒரு கருவறையில்,

தொடர்ந்திடுமோ,

என் ஆய்வு?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s