​(மயங்கினேன், மாதவா!…..)

பரந்தாமன் தோள் சேரும்−

பெண் மாலை நானே;

வரமாகும் வைகுந்தன்−இந்த

வஞ்சிக்குத் தானே!
இனிதான அந்தியின்−

இளஞ்சிவப்பு போலே,

என் வதனமும் சிவக்குதே−

இந்த யாதவனாலே!
கார்காலக் குளிராகும்−

கண் இணையினாலே,

கன்னியின் இள நெஞ்சில்−

காதல் விளைத்தானே!
தள்ளி நின்ற போதெல்லாம்−

தவிக்க வைத்தானே;

தானாக அருகமர்ந்து−

துவள வைத்தானே!
நேரமும், சூழலும்−

இவளை மறக்க வைத்தானே;

நாணமும், நடத்தையும்−

இவளை துறக்க வைத்தானே!
நெஞ்செல்லாம் உருகியே−

கரைய வைத்தானே;

நினவெல்லாம், அவன் மீதே−

கனிய வைத்தானே!
களவு போன இவள் மனதை−

கண்டு பிடிப்பேனோ?

உளவு பார்த்து உணர்ந்திடவே−

ஓடி இளைப்பேனா?
அணு அணுவில் சுமந்தவனை−

அபலை முகிழ்வேனா?

அவன் கரத்தில், எனைத் தந்து−

அன்பில் நெகிழ்வேனா?….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s