​(88) நாச்சியார் மறுமொழி..

உந்தன் விழிகள் இரண்டும்,

என்னைக் கொஞ்சம் பார்க்குமா?

எந்தன் வழியில் இனி, 

வசந்தமும் பூக்குமா?
சொல்லடி ராதே,

சீற்றம் போதும்;

தள்ளி விடாதே, 

தவிக்கிறேன் நானும்!
தினம், உந்தன் வாசல் தேடியே வந்தேன்;−உன்

மனம் இளகாமலே, என் உளம் நொந்தேன்!

சரணம் கண்ணே, சகிப்பாய் என்னை;

வரமாய் நீயும், வாழ்வில் வரணும்!
நீயில்லா உலகம் எனக்கிருள் அன்றோ?

நாயேன் நிலைமைக்கு, வார்த்தைகள் உண்டோ?

தீயாய் தனிமையின் நாவென்னை எரிக்குதே;

தா, தா, உன் துணை, என்னையும் மீட்கவே!
உன் முகம் பார்த்து, உலகம் மறக்கவே−

என் மனம் ஏங்குதே, எந்தன் பைங்கிளி;

என் தோள் சாய, என்றோ நீ வருவாய்?

உன் மடி வாசமும்,  எனக்கென்று தருவாய்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s