​(89) நாச்சியார் மறுமொழி…

உன்னை எண்ணி வாடிடும்−இந்த

உள்ளம், உனக்கு அர்ப்பணம்;

என்னை என்ன செய்வதென்று−நீயும்

சொல்லி அனுப்பணும்!
வானம் துறந்த நிலவுண்டோ−இங்கு 

நானும் உன்னைத் துறக்கவே?

கானம் மறந்த குயிலுண்டோ−இந்த

கண்ணன் தேடும் ராதையே!
தேனை, வண்டு நாடுதே−என்

தேவியே, அது தெரியுதா?

ஊனைத் தாங்கும், உயிரும் நீ, இந்த

உண்மை, உனக்குப் புரியுதா?
இதயம் துடிக்கும் போதெல்லாம்−

உந்தன் பேரே சொல்லுமே;

உதயம் வாழ்வில், உன்னாலே−உன்

உள்ளம், அதையும் அறியுமே!
போதும், நீ தரும் தண்டனை−

பூவையே, பாவம் நானுமே;

வாது செய்ய, நான் வரவில்லை−

வந்தேன், உன்னிடம் சரணமே…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s