​(90) நாச்சியார் மறுமொழி…

கண்ணனின் காதல் நெஞ்சம்−

கன்னி, உனக்கே,  சொந்தம்;

கண்மணியே, என் காதலியே,

கரத்தால் அணைத்திடு, என்னை நீயே!
இரவும், நிலவும் அழைக்கின்றதே−

இதயமும், உன்னை விழைகின்றதே;

மறந்திடு மானே, பொய் கோபமெல்லாம்−

மன்மத பாணம், என்னை எரிக்கின்றதே!
வேங்குழல் இங்கு நான் இசைக்க, 

வேணியே, நீயும் இடை அசைக்க,

ஏங்கிய உள்ளம் சுகம் பெறவே−உன்னைத்

தாங்கிடுவேனே, தளர்கொடியே!
கண்ணும், கண்ணும் பேசட்டுமே;

காதலில் கரங்களும் சேரட்டுமே;

பெண்ணின் தாபங்கள் தொலையட்டுமே−என்

பிடியில், உன் மேனி குளிரட்டுமே!!
நாணத்தில் உன்முகம் சிவப்பதையே−இந்த

நந்த குமாரன், காணட்டுமே!

மௌனத்தில், உன் சிரம் கவிழ்வதையே−இந்த

மாதவன், பரிசாய் ஏற்கட்டுமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s