​(91) நாச்சியார் மறுமொழி…

பாவை உன் மனம் கருங்கல்லோ, உன்−

பார்வை, எனக்கிங்கு இல்லையே!

பூவையே, உன் பேச்செல்லாம்−

போனதோ, இந்த காற்றிலே!
இந்த யமுனை, நம் கதை சொல்லும்;

இந்த குயிலும், கூவியே சொல்லும்;

இந்த அழகிய அந்தியின் மடியில்−நாம்,

இணைந்ததை, உள் மனம் சொல்லும்!
அந்த நிலவும் நமக்கு ஒரு சாட்சி;

அந்த மரங்களின் மெல்லிருள் சாட்சி;

எந்தன் உயிரில் நீ கலந்ததையே−

இன்று சொல்லுமே, உன் மனசாட்சி!
உன் நெஞ்சம், என் பெயர் சொல்லும்;

உன் உலகம், நான் என்று தெரியும்;

பின் ஏனடி, இத்தனை நடிப்பும்?

உன் பெண்மனம் நானின்றி துடிக்கும்!
போன காலங்கள் போகட்டும்;

பூ விழிகள், எனைப் பார்க்கட்டும்;

நானும், நீயும், வரு நாளெல்லாம்,

நெஞ்சம் இயைந்தே வாழட்டும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s