​(92) நாச்சியார் மறுமொழி…

காதல் மனதை, கையில் எடுத்து,

கன்னியின் காலடி வைக்கவா?

போதாக்காலம் எனையும் வருத்துதே−

பெருகிடும் இத்துயர் துடைக்க வா!
எண்ணம் முழுதும் நீயே நிறைந்து,

என்னை தினமும் கொல்வதேன்?

இன்னமும் கூட, என்னை மறுத்து−

இதயம் நோகச் செய்வதேன்?
முன்னம் எந்தன் நெஞ்சக்கூட்டில், 

முத்தே, நீ வந்தமர்ந்ததேன்?

பின்னம் போதில், இப்படி எனக்கு−

பெரிதாய் தண்டனை தந்ததுமேன்?
சேர்ந்தே இருந்த நாட்களை எண்ணி−

சோதை மகன் நான் துவண்டதேன்?

தீர்ந்தே போனது உறவென்றெண்ணி,

தீயதாய் கனவும் கண்டதேன்?
பிரிந்தாய், பொறுத்தேன், இனி இயலாதே−

பெண்ணே, நீயும் பக்கம் வா!

மரித்தே போகட்டும் மனதின் வருத்தம்−

மார்பினில் தவழ, மறுபடி வா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s