​(94) நாச்சியார் மறுமொழி…

கட்டிப் போட்டு உன்னை−என்

கண்ணில் வைத்துக் காப்பேன்;

விட்டுப் போக நினைத்தால்−நானுன்

வழியை மறித்து நிற்பேன்!
எட்டிப் போக வேண்டாம், மானே,

ஏமாற்றம் என்னைக் கொல்லும்;

விட்டுக் கொடுத்துப் போனால், நம்−

வாழ்வில், இன்பம் அள்ளும்!
உன்னை எண்ணி நாளும், 

உருகுகின்றேன் நானும்!

என்னை என்று ஏற்பாய்−அதை

இயம்பு இன்று நீயும்!
கோபம் கண்ணை மறைத்தால்,

பாபம் வந்து சேரும்;

தாபம் என்னை எரிக்கும்−இந்த

சாபம் என்று தீரும்?
காதல் கொண்டு கட்டு−நானுன்

கைதியாக ஆவேன்;

பாதம் இரண்டும் பற்றி−நானுன்

பக்தனாக வாழ்வேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s