விழல் நீராய் வீணாகும்,

வாழ்வதுவும், விளங்கிடுமே, நின்−

கழலிணையில், சிரம் வைத்து,

கனிந்துருகி பணிந்தாலே!
தஞ்சமென சரணடைய,

தொல்லை வினை தீர்ந்திடுமே,

தண்டை உறவாடும்−

தாளிணைகள் நிழலினிலே!
பதுமக் கரங்களும்,

பாங்கான எழில் முகமும்,

பழவினைகள் களைந்திடவே,

பாதையும் வகுத்திடுமே!
அபயத் திருக்கரமும்,

அருள் பெருகும் இரு விழியும்,

அரணாக வந்திடுமே−

அன்போடு தொழுதாலே!
நறுந்திலகமும், நீள்முடியும்,

கருநிறத்தின் பெரு ஒளியும்,

மருப்பொசித்த மாதவனின்

திருத்தங்கையாய் காட்டிடுமே!
திருவடியில் வீழ்ந்தார்க்கு,

ஒரு நொடியே, நீ இசைந்தால்,

கருங்கண்ணன் கழலடியில்,

கருப்பூரமாய் மணப்பேனே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s