(ஶ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி…)
நான்முகன் நாவில் மேவிய தேவி,

நான்மறை ரூபிணியே!
(ஆகம வேத கலாமய…)
மடமையும், மருளையும் விலக்கிடும் வாணி−

மனதினில் ஞானம் பிறந்திட வா நீ!
(நாக கங்கண..)
இடம் இது எனக்கென, என்னுள் அமர் நீ−

இருளை நீக்கியே, அருளையும் அளி நீ!
(பலவிதமாய் உன்னை பாடவும், ஆடவும்..)
வெள்ளைத் தாமரையில் விளங்கிடும் தேவி−

வித்தைகள் பலவும் உன்னையே விளக்குமே!

பிள்ளை யான் உந்தன் பேரருள் வேண்டி நின்றேன்;

பெருகிடும் கருணையால், பரிந்தென்னை ஆள்வாய்!
(உழன்று திரிந்த என்னை..)
உன்னை உளமிருத்தி, உயர்கலை வரப் பெறவே,

என்னை பொருளாக்கி, ஏற்றம் நீ தந்திடுவாய்!

சின்னஞ் சிறியன் நான்−சிற்றறிவுடையேன் நான்;

சற்றே இரங்கிடுவாய், தாயே சரஸ்வதியே!..
(துன்பப்புடத்தில் இட்டு)
ஆயக்கலைகள் எல்லாம் அன்னை உன் எழில் வடிவே;

அனுக்ரஹம் நீ செய்தால், எமக்கது வாய்த்திடுமே!

நாயேன் உன் அடிகள், நாடியே வந்து நின்றேன்−

நலங்களைச் சேர்த்திடுவாய்… நான்முகன் நாயகியே…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s