(பாவியென்றாலும், பாலிப்பாயே…)

எண்ணமும் சிதறிப் போய் விடுமோ?

என் பிறவியும் வீணாய் ஆயிடுமோ?

உன்னை ஒழிந்த இதரவற்றில்,

உள்ளமும் கைதியாய் சிறைபடுமோ?
ஊர் போய் நானும் சேரும் முன்னே, எனை

உலக விசாரம் நசித்திடுமோ?

யார்தான் இங்கே சதமென்று, என்−

சிந்தையில் தெளிவென்று உதித்திடுமோ?
இருப்பை, நெருப்பாய் அறியலையே; இந்த

வெறும்பை மேல்,  மையல் அகலலையே;

பொறுப்பை, உன்னிடம் அளிக்கலையே; மறு−

கருப்பை வழி நான் அடைக்கலையே!
ஆழியில் கரைத்த சந்தனமாய், ஆய்−

தாழியில் என்னை நான் தொலைத்தேனே;

ஊழி முதல்வனை வணங்காமல், 

உய்ய வகையின்றி களைத்தேனே!
நாலின் மறைப்பொருள், உனை

நயக்கலையே;  ஒரு−

நாளில் உன் நாமம் நவிலலையே;

காலன் வருவதெண்ணி மனம் கலங்கலையே;

காலத்தே, உணைர்ந்துன்னை, நான்

கரையலையே!
முந்தைய வினையோ, என் நினைவில்லையே;

பின் வரும் விதியோ, நான் அறியலையே;

இன்னமும், பிறவி எத்தனை, புரியலையே;

திண்ணம், உன் கழலென, நான் தெளியலையே!
இறக்கவே, பிறந்தேன் என்பதுவும்,

பிறக்கவே, இறப்பேன் என்பதுவும்,

பேதை ஏனோ அறியலையே;

பெரு வினை எனதும் ஒழிக்கலையே!
அவத்தமே பிறவியாய், நிதம் வாழ்ந்து,

அடியிணை நிழலை மறந்தேனே;

பவ நோய்க்கு என்றுமோர் அருமருந்தே!

பாவியென்றாலும், எனை நீ பாலிப்பாயோ?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s