​(வருவாயே,  ஶ்ரீமஹாலக்ஷ்மியே…)

அருள் பெருக்கி நீ, எம்மை

ஆட்கொள்ள வா;

இருள் கெடுத்து நீ, எமக்கு

ஒளி கூட்ட வா!
இனி இல்லை என்றின்னல்

நீ போக்க வா;

கனிவெல்லாம், கண் இணையால், 

நீ சேர்க்க வா!
என் மனையில் குடியிருக்க 

நீ ஓடி வா;

உன் இல்லம் என்றதையும்

நீ தாங்க வா!
மாலவனின் திருமார்பில்

மகிழ்ந்தமர்ந்தாயே! என்

மனையினிலே மகிழ்வோடு,

நீ நிலைக்க வா!
புனல் பிரிந்த மச்சமொன்று 

உயிர் வாழுமோ? உன்−

பரிவின்றி, ஏழைக்குமே,

எது கூடுமோ?
கன்றுடைய வழுவெல்லாம், 

பசு உகக்குமே!

நன்றென்று என் ஏதம்

நீ பொறுப்பாயே!
சங்கடங்கள் எல்லாமும் நீ 

அழிப்பாயே! எமக்கு−

மங்கலங்கள் எல்லாமும்

நீ அளிப்பாயே!
வறுமை எனும் வார்த்தையையும், நீ

மாய்க்க வா;

மறுமையிலும் சுக மார்கம், நீ

எமக்கு தா!
பாதகங்கள் தீண்டாமல்,

எமை காக்க வா; அந்த−

மாதவனின் பொன்னடியில்

எமை கோர்க்க வா!
தாயாக எமை என்றும், நீ

தாங்க வா!

சேயாக, சக்கரத்தான்

எமை ஏற்க வா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s