​(85) நாச்சியார் மறுமொழி…

கண்ணே, அப்படி பார்க்காதே, இந்த−

கண்ணன் மனது தாங்கலையே;

பெண்ணே, உனக்கென்னை புரியாதா? நான்−

புனிதன் என்பதும் தெரியாதா?
காதல் தோய்ந்திட பார்ப்பாயே−இன்று

காணாமல், அது ஏன் போனதடி?

சோதனை இது என்ன, சொல்லடி நீ−என்

சொர்க்கமே, உன் விழி ஓரம் அன்றோ?
பார்வைப் பரிசுகள் நீ தரவும், அதை−

பொத்தியே வைத்து, நானிருந்தேன்;

யார் கண் அதிலே பட்டதுவோ? இன்று−

யாதவன், யாவுமே இழந்தேனே!
உள்ளம் குளிர, உன் விழியால்−எனை

ஒரு தரமாயினும், நீ நோக்கு;

கள்ளம், கபடம் இல்லாத−இந்த

கண்ணன் கடுந்துயர், நீ போக்கு!
கண்ணும், கண்ணும், கலந்து விட்டால்−இந்த

பெண்ணின் மனமும் மாறிடுமே!

இன்னும் நான் என்ன சொல்வதுவோ?−உன்

கண்ணனின் பிழை தாம் வேறுளதோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s