​(86) நாச்சியார் மறுமொழி..

இத்தனை கோபம்,  என் மேல் எதற்கு?

என் முகம் பாரடியே;

பித்தனாய் உன் முன், நின்றான் கண்ணன்−

பேசுவாய் நீயடியே!
உன்னை அன்றி வேறோர் உறவு, 

எனக்கும் ஏதடியே?

என்னைத் தந்தேன், உன்னவனாக..

ஏற்றுக் கொள், ப்ரிய சகியே!
உன் இரு விழிகளில் நீரைக் கண்டால்,

என் உள்ளம் வெடிக்குதடி;

மண்ணில் விழுந்த மச்சம் போல, 

என் மனம் துடிக்குதடி!
தனிமைத் துயரம் இனி இல்லை என்றே,

தமியேன் வந்தேனடி;

இனிமையாக இணைவோம் நாமே−

ஏக்கங்கள் ஏதுக்கடி?
கண்மணியே நீ, மன்னிக்க வேண்டும்;

கண்ணனும் பாவமடி;

தண்மையான திருக்கரம் எதற்கு?

என்னை நீ அணைப்பாயடி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s