​(96) நாச்சியார் மறுமொழி…

எனக்கும், ஏன் இந்த சோதனையோ?

என்றும் தொடரும் வேதனையோ?

இத்தனை பாடு…படுத்துகிறாளே−

இது, யாரே தந்த போதனையோ?
தகிக்கும் தென்றல் காற்றே, நீயும்−

தளிர் கொடியாளிடம், தகவலைச் சொல்லு;

சுகிக்கும் பொழுது எல்லாம், வீண் போய், நான்−

சோகம் கொண்ட சேதியைச் சொல்லு!
நெஞ்சில் என் மேல், ஈரம் வைத்து,

நங்கை அவளிடம், நியாயம் கேளு!

தஞ்சம் போன எந்தன் நெஞ்சை−

கொஞ்சம் கருணையால், நோக்கச் சொல்லு!
பொறுமை நிறைந்து, பொலிந்தவள் அன்றோ?

வறுமை இன்றதில், வந்ததும் ஏனோ?

சிறுமை செய்தெனை, சினம் கொண்டாளே!

பெருமை அவளுக்கு, பரிவதில் உண்டே!
ஏழை மனது, தத்தளிக்கிறதே−

ஏந்திழையாளும், இரங்கிடுவாளோ?

கன்னி, அவளும் கனிந்து விட்டாலே,

காலடி கிடப்பான், கண்ணன் தானே!
என்னை அவளும், ஏற்றுக் கொண்டாலே,

ஏழை என்றும், அவள் வசம் தானே!

உள்ளம் உடைந்து, நொறுங்கி விட்டேனே−

ஓடி வந்தெனை, அவள் தேற்றிடுவாளோ?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s