​(பூக்களும் மயங்குதடி, பூவையே…)

எட்ட நின்னு பாத்தால் உன்

எழில் வதனம் தெரியலைனு,

கிட்ட வந்து பாத்திடவே−

கெஞ்சிப் பூவும் கேட்டுது!
போட்டியாக வரமாட்டேன்−

பாத்த உடன் போயிடுவேன்,

என்று பூவும் சொன்னது

எனக்கு தெம்பும் வந்தது!
கரத்தில் எடுத்து வரும் போதே,

கண் அழகை பாத்தது;

நிறமெல்லாம் தானிழந்து,

நங்கை உன்னில் விழுந்தது!
இது என்ன புதுப் பூவோ,

இவ்வளவு அழகாயுள்ளதென்று,

எட்டி, எட்டிப் பாத்து உன்னை,

என்னை கேள்வி கேட்குது!
என்ன பதில் சொல்வதென்னு,

எனக்கு ஒன்னும் தெரியலை;

சின்னப் பூக்கு சேதி சொல்ல−என்

சின்ன புத்திக்கெட்டல!
முந்தியால உன் முகத்தை,

மூடி நீயும் வெச்சுக்கடி;

இந்த மாதிரி, யார் கண்ணும்,

இனி விழாமல் பாத்துக்கடி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s