​(ஏற்பாயோ, என்னை?….)

என்னை மறந்த இந்நெஞ்சம்−

அடைந்ததேன், உனை தஞ்சம்?

மீண்டு வருமா  கொஞ்சம், இல்லை−

மடியில் காணுமோ, தன் மஞ்சம்?
உயிர் பறந்ததோ, தேடி−

உனைச் சேர்ந்ததோ, நாடி;

உரைப்பதும் யார், போடி, 

உள்ளம் சோர்ந்ததே வாடி!
கரை காணுமோ, பெண்மை?

காலம் சொல்லுமோ, உண்மை?

கன்னி மனதிலே மென்மை−

கண்ணா, இதுவா உன் வண்மை?
எனக்கானவன் நீயே;

என்னில் மூட்டினாய் தீயே;

என் அருகில் நீ, வாயேன்;

எனக்கு உன்னையே, தாயேன்!
வாழ விழைகிறேன் நானும்−

வாழ்வு தந்திடு, நீயும்!

விடியல் வந்திடும், தானும்;

வஞ்சிக்கென்றும் நீ, வேணும்!
உடலும், உயிருமே உனதே−

உனக்கு உருகுதே மனதே;

ஏதுமில்லையே எனதே,

இவளை ஏற்றிடு, தனதாய்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s