கண்ணே, கண்ணனின் நிலை பாரு−இவனை
கருணையால், நீயும் கரை சேரு;
பெண்ணே, பரிவுடன் வாய் பேசி−இந்த
பித்தனும் பிழைக்க, நீ யோசி!
நாளும், பொழுதும் வேதனையில்−நான்
நலிந்தேன், நங்கையே அறிவாயா?
“மாளும் துயரம்”எனச் சொல்லி−என்
மங்கையே, நீ எனை அணைப்பாயா?
துணை எனக்கென்று, எவர் உண்டு?−ஒரு
தோளும் சாய்ந்திட, எவர் உண்டு?
நினைத்தே பார்ப்பாய், நீ இன்று−என்
நெஞ்சின் நெருப்பை உணர் இன்று!
தன்னந்தனியாய், நிற்கின்றேன்−எனைத்
தாங்கிட வருவாய், துடிக்கின்றேன்;
முன்னம் நீ தந்த முத்தங்களை,
மீண்டும் பெறவே தவிக்கின்றேன்…..