​(என் உயிர், நின்னதன்றோ?…..)

என் செல்லமே, பட்டுக்குட்டி,

எங்கே ஓடற நீ, என்ன விட்டு?

எது வேணும்னாலும், என்ன கேளு;

இன்னும் ஆகல நீ பெரிய ஆளு!
பால் தர நானிருக்கேன்;

பக்கத்திலே துணையுமிருக்கேன்;

கால் என்ன,மொளச்சு போச்சா? நீ

கட்டவிழ்த்து போகலாச்சா?
கண் அசந்தா ஓடிப் போற;

கால் போன போக்கில் போற!

என்னனு நெனக்கறது? உனக்கு−

ஒன்னுனா, என் செய்றது?
அம்மாக்கு கட்டுப்பட்டு, 

அடக்கமா  நீ நடக்கணும்;

சும்மாவே ஆட்டம் போட்டு,

என்ன −

சோதிக்காதே, சொல்லிப்புட்டேன்!
நீ தானே, என் உசிறு−ஒன்

நிழலுமே, எனக்குசிறு;

வீணாக நீ அலஞ்சா,

வருந்தாதோ, என் மனசு?
தாயுள்ளம் தெரியாமத்தான்,

தடை தாண்டி ஓடுறயோ? இந்த

ஆய் உள்ளம் புரியாமத்தான், நீயும்

ஆட்டமே போடுறயோ?
முந்தான முடிஞ்சு வெக்க

முடியாதே, என்னால தான்;

எந்தாயே, மனமிரங்கு;

என் அணப்புல நீ அடங்கு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s