​(102) நாச்சியார் மறுமொழி…

உனக்கு மட்டும், என் இதயம் 

சொந்தமல்லவா? அதில்−

ஒருத்தருக்கும், பங்கு என்றும் 

இல்லை அல்லவா?
எனக்கும் உந்தன் உள்ளத்திலே,

இடம், உண்டல்லவா?

எந்த இடைவெளியும், நமக்குள் என்றும்,

இல்லை அல்லவா?
வந்திடுவாய், வந்திடுவாய், 

என் மகராணி;

தந்திடுவாய், தந்திடுவாய், 

தளிர் கரமே, நீ!
வட்ட நிலா வான் வருதே, 

வீண் போகலாமா? நீ

எட்ட இருந்து, தொடுக்கும் கணையில்−

நான் வீழலாமா? 
மலர்களெல்லாம் வாடிடுதே, 

மாலை சூட வா−

இந்த மாலையுமே மறைகிறதே, 

மார்பில் சாய வா!
இணைந்திடுவோம், இணைந்திடுவோம், 

ஓர் உறவாக−

என்றும் இருந்திடுவோம், இருந்திடுவோம், 

ஓர் உயிராக!
பார்ப்பவர்கள் பார்க்கட்டுமே, 

பாதகம் என்ன? இங்கு−

ஆர் என்ன சொன்னாலும்,

அச்சமும், என்ன?
யாரும் வந்து கேட்பதற்கே, 

ஏதுமில்லையே−இந்த−

யாதவனின் காதலி நீ, 

இதில் ஐயமில்லையே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s