​(பிழைத்துப்போ, கண்ணா…)

உன்னில் தவழ விழையும்,

ஒற்றைக் கொடியும்  நானே;

எனக்கு உந்தன் மார்வம், நான்−

ஏறிப் படரும் தூணே!
மனது பேசும் மொழியும்

மன்னன் உன்னைத் தானே;

எனது காதல் நிலவு−

உலவி மகிழும் வானே!
தோளில் சாயும் நேரம்−

துளிர்த்து இன்பம் வருமே;

தோகை தீண்டும் இடமே−

தேனும் உருகி விழுமே!
விழியில் தாங்கும் போதும், நீ−

வழுக்கி விழுந்ததேனோ?

எழிலின் உருவம் இதனில், நீ−

எளிதில் சாய்ந்ததேனோ?
விலகி நானும் நின்றால்,

நிலைமை தெளிந்து விடுமோ?

மலைத்து நின்ற மனதும்,

மீண்டு, உன்னில் எழுமோ?
வார்த்தை ஒன்று சொல்லு;

வஞ்சி தள்ளி நிற்பேன்;

தீர்த்தன் நீயும், ஐயோ,

இனியும்−

தவித்திடாது காப்பேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s