(ஆணையிடு, அடிபணிவேன்…)

ராதை:−
என் மக்கள் துயர் என்னை

உன்மத்தமாய் ஆக்கிடுதே;

ஏன், ஏன், ஏனென்றே, என்

உள்ளம் துவண்டிடுதே;

ஏதங்களால் நிறைந்தாலும்,

இவர் துன்பமெனை வாட்டிடுதே;

ஏது நான் செய்திவரை, 

இடரினின்று மீட்டிடுவேன்?
கண்ணன்:−
கலங்காதே, கண்மணியே;

காலம் வரும், நேரம் வரும்;

கலி நீங்க அவர் உள்ளம், உன்

கழலிணையை நாடி வரும்;

விலக்கிடுவாய் அன்றவர் வாதை, 

உன் தாய் மனதும் குளிர்ந்து விடும்;

நிலை இன்பப் பெறுவாழ்வும், இனி 

அவர்க்கே ஆகி விடும்!
ராதை:−
காத்திருக்கச் சொல்லுகிறாய்;

கண்ணா, அது சரி தானோ?

பார்த்திருத்தல் முறை தானோ?

பெற்றவளால், ஆயிடுமோ?

தம் மக்கள் அழுது சென்றால்,

தாய் அவளும் சகிப்பாளோ?

என்னாலே ஆகாதே,

பெம்மானே, என் செய்வேன்?
கண்ணன்:−
உன் நெஞ்சின் சோகமெல்லாம், 

என் உயிரைப் பருகுதடி;

ஊன் எனது உருகுதடி,

உயிர் வாதை பெருகுதடி;

கண் காட்டு, கனி மொழியே,

காரியம் நான் செய்திடுவேன்;

இன் முகமே காட்டிடுவாய்;

எதுவும் உனக்காய் ஆக்கிடுவேன்!
உன் அடியிணையை நாடி வரும், 

உன் அன்புப் புதல்வருக்கு,

என்னாளும் நிழல் தருவேன்−

என் அன்பே, வருந்தாதே;

கண்ணாளன் நான் சொன்னேன்−

கலி அவரைத் தீண்டாது;

பொன்னாகும் அவர் வாழ்வு,

ப்ரிய சகியே, சரிதானா?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s