​(106) நாச்சியார் மறுமொழி….

கண்ணே, அளிப்பாய் ஆனந்தமே−உன்

கடைக்கண் பார்வை, என் பெருந்தனமே!

பெண்ணே, உன் சிறு புன்னகையே−இந்த

கண்ணன் வேண்டிடும் உயிர் வரமே!
உந்தன் மனதில் எனக்காக−

ஒரு தனியிடம், என்றும் உண்டல்லவோ?

எந்தன் வாழ்வின் விடியலுக்கே−

உந்தன் உறவே, நல் ஒளி அல்லவோ?
தன்னந்தனியே, வாடுவதேன்?

துணை எனைக் கொள்ள, தயக்கமும் ஏன்?

இன்னமும், ஏற்கவே மறுப்பதுமேன்?−உன்

இன்பத்தை, நீயே எதிர்ப்பதுமேன்?
வானை விட்டு, வெண்ணிலவும்

வேறொர் இடமே ஏகிடுமோ?

வைகுந்தன் என்னை தவிர்த்து விட்டு,

வஞ்சி உன் வாழ்வும் ஒளிர்ந்திடுமோ?
இருகரம், உனக்காய் காத்திருக்கு;

இதில், அடைக்கலம் நீயும் கண்டிடுவாய்!

ஒரு மனம் இங்கே துடித்திருக்கு;

உன்னை அளித்தே, அதை மீட்டிடுவாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s