​(2)  மான்ஸரோவர்..

தேவி இருப்பின் சேதி,

தெரியுமோடி, மதியே?

ஆவி உருகத் துடிக்கும், இந்த−

அவஸ்தை, எந்தன் விதியே!
எங்கு மறைந்து கொண்டாள்,

என்னை ஆளும் அந்த ரதியே−

ஏதம் எனது தானோ,

இது யாரோ செய்த சதியே?
அந்தி வானச் சிவப்பில், அவள்

அதரம் தெரியுதேடி;

அவள் நாணச் சிவப்பும் ஏனோ,

அதிலே கலந்து விட்டதேடி!
மந்தி பாயும் மலையில், 

மடியில் கிடந்ததெல்லாம், என்−

மனதில் வருகுதேடி, ஏனோ,

மையல் பெருகுதேடி!
பொங்கிப் பரவும் புனலில்,

பேதை அவளும் நானும், அன்று−

முங்கி மகிழ்ந்ததெல்லாம்,

என்னில் மிதந்து வருகுதேடி!
எங்கு சென்று நானும்,

என் கோதை அவளைக் காண்பேன்?

இங்கு உள்ளாள் என்ற

இனிய சொல்லும் கேட்பேன்?
சித்தம் எல்லாம் அவளாய்,

பித்தன் நானும் ஆனேன்;

தத்தை அதனைஉணர்ந்து,

ஒரு முத்தம் தருவாளா?
கனகம் பூண்ட கரத்தால்,

கன்னி அணைப்பாளா?

எனக்கு அவளைத் தந்து,

ஏழைக்கருள்வாளா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s