​(கண்ணான கண்ணா…..)

சொக்கத் தங்கம் இவனோ?

சிரிக்கும் சொர்கம் இவனோ?

சிந்தையையே குளிரச் செய்யும்−

சந்தத் தமிழும் இவனோ? அந்த−

சங்கத் தமிழும் இவனோ? 
எந்தன் உலகின் ஒளியே, என்−

உயிரில் கலந்த உறவே,

தேடி வந்து என்னைச் சேர்ந்த

தென்றல் சாறலே…என்−

மன்றம் ஆள வா!
இந்தக் கரங்கள் இரண்டும்

உன்னை−

ஏந்தி, ஏந்தி களிக்கும்; 

இதழில் வடியும் அமுதம்−

இதயம் நனைக்குதே;

என்−

உதயம் ஒளிர்ந்ததே!
எனது விழிக்கு வரமே!

உன்−

மொழிகள் வசந்த வரவே;

வாசல் வந்த நிலவாய்−

ஒளிரும் கனகச் சிமிழே!

என்−

உள்ளம் கொண்ட அழகே!
உந்தன் வரவினாலே,

என் வாழ்வும் பூத்ததே;

எந்தன் மடியை நிறைத்த

தங்கப் பதுமையே! நான்

தரிக்கும் ஆவியே!….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s